Kogilavani / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற மாணவர் சாகித்திய விழா நிகழ்வுகளின் தொகுப்புகள் அடங்கிய இறுவட்டு வெளியீடு திங்கட்கிழமை(6) பிற்பகல் ஒரு மணிக்கு கல்லூரியின் முதல்வர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முதல்வர் சந்திரலேகா கிங்ஸ்லி, மொழிவரதன், ராகலை பன்னீர், சிவனு மனோகரன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சாகித்திய விழாவில் இடம்பெற்ற 'மலையக வாழ்வும் வரலாறும்' கண்காட்சி, மலையக பாரம்பரியங்களை விளக்கும் கலை நிகழ்வுகள், 'தளம்' நினைவு மலர் வெளியீடு என்பன இவ்விறுவட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
2 hours ago