George / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம் ஊடக மையத்தினால் தயாரிக்கப்பட்ட, சுன்னாகத்தில் தகிர்க்கும் தண்ணீர் என்னும் இறுவெட்டு வெளியீடு வெள்ளிக்கிழமை(17) பிற்பகல் சுன்னாகம் கதிரமலை சிவன்கோவில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
சுன்னாகம் கதிரமலை சிவன் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சர்வேஸ்வரக் குருக்கள், இறுவட்டை வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி வைத்தியகலாநிதி செந்தூரன் பெற்றுக் கொண்டார்.
இறுவெட்டின் பிரதம ஆக்கவியலாளர் எஸ்.ஜெராட் மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவச் சங்கத் தலைவர் வைத்தியகலாநிதி வ.முரளி, களனி மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி கே.குமரேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
மற்றும் இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வட மாகாண சபையின் உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா.கஜதீபன் தமிழ் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி எம்.மணிவண்ணன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025