Sudharshini / 2015 மே 05 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா
யாழ். நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இவ்வாண்டுக்கான இயல், இசை நாடக விழா கடந்த வியாழக்கிழமை (30) ஆரம்பமாகியதுடன் நேற்று திங்கட்கிழமை (04) நிறைவடைந்தது.
நாச்சிமார் கோவிலடி சபேசன் குழுவினரின் மங்கல இசை, நல்லூர் சாரங்கம் இசை மன்ற மாணவர்களின் இறை வணக்கப்பா, காரைநகர் கிழவன்காடு கலாமன்ற மாணவி லதாங்கி ராமகிருஷ்ணனின் இசைக்கச்சேரி, சிவகுமாரன் பத்மநாதனின் புல்லாங்குழல் இசைக்கச்சேரி ஆகியன இடம்பெற்றன.
சுதர்ஷினி ஹரன்சனின் நெறியாள்கையில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர் வழங்கிய நாட்டியாஞ்சலி, இன்றைய தமிழ்ச் சினிமாவின் இரசனை மட்டம் ஏற்புடையதா என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் இ.சர்வேஸ்வராவின் நெறிப்படுத்தலில் சொல்லாடு களம், இலங்கை வேந்தன் இசை, நடன, நாடகம் என்பன இவ்விழாவை மேலும் சிறப்புறச் செய்தன.
கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற முதலாம் நாள் நிகழ்வில், நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.




26 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
46 minute ago
2 hours ago