2021 மே 06, வியாழக்கிழமை

யாழில் கம்பன் விழா

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில்; கம்பன் விழா வெள்ளிக்கிழமை (07) மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

சமயத்தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஓய்வுநிலை நீதியரசர் ஜெ.விஸ்வநாதன் தலைமையுரையாற்றினார். வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் ஆ.பத்திநாதன், இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் உரையாற்றினர்.

தொடர்ந்து திருவாசகம் மற்றும் இராமநாடகக் கீர்த்தனைகள் ஆகிய நூல்கள், யாழ். மேடையில் வெளியிடப்பட்டன. இவற்றின் பிரதிகளை தொழிலதிபர் எஸ்.பி.சாமி, வைத்திய நிபுணர் வெ.சுதர்சன், கண்டாவளைப் பிரதேச செயலர் த.முகுந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

யாழ். கம்பன் விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கவிதைப் போட்டிக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

சிறப்பு நிகழ்வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இலக்கியச் சுடர் த.இராமலிங்கத்தின் தலைமையில் இலக்கிய ஆணைக்குழு இடம்பெற்றது. அற உரைகளில் தலையாயது எது? என்ற தொனிப்பொருளில் ஆணைக்குழு இடம்பெற்றது. 'சடாயு சொன்னதே' என கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனும் 'வசிட்டர் சொன்னதே' என கலாநிதி ஆறு.திருமுருகனும் 'சீதை சொன்னதே' என தமிழருவி த.சிவகுமாரனும் கருத்துரைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .