2025 ஜூலை 23, புதன்கிழமை

30 வருடத்தின் பின் மட்டக்களப்பில் மகிடிக்கூத்து

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவத்தைக்கொண்டதும் கடந்த 30 வருடகாலமாக அழிந்துபோயிருந்த மகிடிக்கூத்து முதன்முறையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு பிரதேசத்தில் அரங்கேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய நிகழ்வான மந்திரதந்திரங்களை சித்திரிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்ட இந்த கூத்துக்கலையினைக் காண பிரதேசத்தில் இருந்தும் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அருகிவரும் கூத்துக்கலையை உயிரூட்டுவதற்கு தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

தேற்றாத்தீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் உதயம் விளையாட்டுக்கழத்தின் தலைவர் இரா.கதிரவேற்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் மௌனகுரு, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை பீட தலைவர் ஜெய்சங்கர், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச கலாசார த.பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தேற்றாத்தீவு பொதுவிளையாட்டு மைதானம் கூத்து அரங்காக அலங்கரிக்கப்பட்டு மகிடிக்கூத்து வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற மிக மோசமான யுத்தம் காரணமாக அழிந்துபோயிருந்த கலையினை வளர்ப்பதற்காக இவ்வாறான செயற்பாடுகள் புத்துயிர் அழிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அழிந்துபோயிருந்த இந்த மகிடிக்கூத்து கலையை மீள் உருவாக்கம் செய்யப்பட்டதானது இக்கலையை அழிந்துவிடாமல் பாதுகாக்க மட்டுமன்றி எமது எதிர்கால சந்ததிக்கும் இது கையளிக்கப்பட்டுள்ளதாகவும் உதயம் விளையாட்டுக்கழக தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .