Niroshini / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனை முகத்தோனே தே ரேறிவருவாய்
ஆறுமுகன் சோதரனே தேரேறிவருவாய்
பானை வயிற்றோனே பங்கஜ நிறத்தோனே
பாவம் வினை அறுத்திடத் தேரேறி அருள்வாய்.
ஆதிசிவன் புத்திரனே தே ரேறி வருவாய்
அன்னை உமைபாலனேதே ரேறிவருவாய்
அத்திமுகத்தோனே ஔக்கருள் செய்தவனே
எத்தாலும் எமைக்காக்கத் தேரேறி அருள்வாய்
நெற்றிக் கண் உடையனே தேரேறி வருவாய்
நீண்டதுதிக்கையானே தேரேறி வருவாய்
மோனைப்பொருளே மூத்த கணபதியே
முன்னின்றெமைக்காக்கத் தேரேறி அருள்வாய்
ஏரூர் மதிவாழ்பவனே தேரேறிவருவாய்
எலி வாகனத்தானே தேரேறி வருவாய்
மத்த கஜத்தானே மாலோன் மருமகனே
மக்களெமைக் காத்திடத் தேரேறி அருள்வாய்
வுந்து கரத்தோனே தேரேறி வருவாய்
தொந்திவயிற்றோனே தேரேறிவருவாய்
வந்தவழி மரங்களின் கீழ் குந்தியிருந்தருள்வோனே
வரசித்தி விநாயகனே தேரேறி அருள்வாய்
-கந்தபேரின்பம்
தீவான்
செங்கலடி
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago