Kogilavani / 2016 மே 13 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

விடியல்கள் எல்லாம்
எனக்கானதென்று எழுகிறேன்
ஆயற்கலைகள் அறிந்திட
ஆவல் கொள்கிறேன்
அன்னையோ அடுப்பங்கரைக்கு அழைக்கிறாள்
தேநீர் போட...
மீண்டுமொரு அழைப்பு
காலை ஆகாரத்தினைத்
தயார் செய்ய...
மற்றுமோர் அழைப்பு
பகல் போசனத் தயார்படுத்தலுக்காக...
பின்னரும் ஓர் அழைப்பு
பாத்திரங்களின் சுத்தம் பற்றி
விளக்கமளிக்க...
மாலை நேரத் தேநீர்
பின்னர் இராப் போசனம்
பாத்திரங்களின் சுத்தம்
என்று அழைப்பு தொடரும்...
எனது நிகழ் காலத்தை
அவளின் இறந்த காலத்தின் மீது
தூக்கியெறிகின்றேன்...
அழைப்புகளின் கைதியாய் அவள்
அடுத்தவரின் பசியாற்றியே
தன்னைத் தொலைத்து நின்றாள்...
உயர்தரத்தின் அதி உச்ச சித்தியுடன்
அடுப்பங்கரையில் அழிந்தே போனாள்
அவளுக்கென்று இருந்த உலகம்
உலையில் விழுந்து கருகிற்று...
சேவை செய்யும் அன்பின் உருவாய்
அவள் பிம்பம் பெற்றபோதும்
அதன் நீட்சி தொடர்கின்றது
அ‡தன்றி அவளுக்கு வேறு தெரிவுகளுமில்லை...
எனது காலைகளையும்
மாலைகளையும் இரவுகளையும்
நான் கனவு காண்கின்றேன்
அவை எனக்கானதாக இருப்பதாயும்
அவற்றில் நான் தொலைந்து போகாதபடியும்...
-சுமையா ஜின்னாஹ்
24 minute ago
34 minute ago
35 minute ago
38 minute ago
fazlin Friday, 20 May 2016 04:21 AM
super sumaiya jinnah, very nice
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
35 minute ago
38 minute ago