2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

டிட்வா புயலால் தமிழகத்தில் 3 பேர் பலி

Freelancer   / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

'டித்வா' புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 57 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தில் டித்வா புயல் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுவர் இடிந்து விழுந்து இறந்தனர். மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 149 கால்நடைகள் உயிரிழந்தன.

57 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் நாகப்பட்டினத்தில் மட்டும் 24 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும், மயிலாடுதுறையில் 8000 ஹெக்டேர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் 234 குடிசைகள் சேதமடைந்துள்ளன.

தமிழகத்தில் மழை பாதிப்பு அதிகமுள்ள 9 மாவட்டங்களில் 38 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தி அதில் 2300 பேரை தங்க வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X