Princiya Dixci / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீ தனிமையை ரசிக்க என்
கண்களோ உன்னையே
தேடுகின்றது. உன் கண்ணின்
காந்த அலை போதுமடி இவ்
இயற்கையே உன் காலடி தேடி
வந்துவிடும். என் இனியவளே......
நான் நானாக தான் இருந்தேன்
உன்னை காணும்வரை இன்று
என்னையே மறந்து உன்னை
மட்டுமே என் இதயம் தேடுகின்றது.
நான் தொலைந்துவிட்டேன் உன்
மாய அறைக்குள் இதிலிருந்து
விடுப்பட முடியாமல் மூழ்கி
கிடக்கின்றேன் உன்னாலே.....
காற்றின் கீதம் கூட உன்னையே
எனக்கு காட்டித்தருகின்றது பெண்ணே
நீ உண்மையில் மோகினி தான் என்
உள்ளம் அறிந்தும் அறியாததைப்போல
பாவனை செய்வது ஏனடி பெண்ணே.....
30 minute ago
40 minute ago
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
41 minute ago
44 minute ago