Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில், பொத்துவில் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நடமாடும் சேவை ஊடாக நாளாந்தம் கிரமமான முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாக, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம், இன்று (12) தெரிவித்தார்.
பொத்துவில் பிராந்தியத்தில், கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், பொதுமக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி சில வர்த்தக நிலையங்கள் திறந்து இருப்பதாகவும் மக்கள் வீதிகள் நடமாடுவதையும் காணக்கூடியதாக உள்ளதென்றார்.
இவர்களை கைது செய்வதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் மற்றும் சுகாதாரத் துறையினரும் கூட்டாக இணைந்து விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
'ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சில வர்த்தக நிறுவனங்களில் அரசாங்க கட்டுபாட்டு விலையை விட அதிக விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்வது, பொறிக்கப்பட்ட விலையை மாற்றம் செய்வது, பொள்;கள் விற்பனை செய்யும் போது நிபந்தனை விதிப்பது, பொருள்களை விற்பனை செய்ய மறுப்பது. காலவதியான பொருள்;களை விற்பனை செய்தல் அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்தல், உணவுப் பொருள்களில் கலப்படம் மேற்கொள்தல் என்பன தண்டைக்குரிய குற்றமாகும்,
'இவ்வாறான வர்த்தக நிலையங்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், உரிய உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025