Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 நவம்பர் 05 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் ஒருவருக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருந்த இரு மாடுகளை திருடிச் சென்று பாலமுனை நடுவோடையிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவற்றை அறுத்து வெளியாருக்கு விற்பனை செய்த நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.ரஹீம் தெரிவித்தார்.
சுற்றிவளைக்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேக நபர்கள் தப்பியோடி உள்ள நிலையில் அவர்களால் அறுவை செய்யப்பட்ட சுமார் 60 கிலோ இறைச்சி மற்றும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சி மற்றும் உபகரணங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸாரால் அழிக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .