Editorial / 2025 ஜூன் 20 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் கறுத்த பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சட்லத்தை மீட்டுள்ளனர்
இறந்தவர் செங்கலடி பதுளை வீதியில் இலுப்படிச்சேனை கன்னித்தீவு வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய மதுரூபன் பிரதாபன் என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலத்திற்கு அருகில் மதுபான போத்தல் மற்றும் கிருமிநாசினி குப்பி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் முதற்கட்ட விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் மேற்கொண்டார். அதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .