2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆலயத்திற்குச் சென்ற மேலும் 30 பேருக்குக் கொரோனா

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில், தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 30 பேருக்குக் கொரோனாத் தொற்று  ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்  தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி மேற்படி ஆலயத்தில்  இறுதி உற்சவமான தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்று விழாக்கள் அனைத்தும் முடிவுற்றிருந்தன. இதனையடுத்து இந்நிகழ்வில் கலந்துகொண்ட  சிலர் நோய்வாய்ப்படவே அவர்களில் 13 பேருக்கு  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று  (14) மேலும் 65 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வாகரையில் இதுவரை 11,550 நபர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  வாகரை சுகாதார வைத்திய அதிகாரி யோ.விவேக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .