2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆளில்லா நேரம் பார்த்து கடைக்குள் புகுந்த வாகனம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். என். எம். அப்ராஸ், எஸ்.அஷ்ரப்கான்

கல்முனையிலிருந்து இன்று (17)அதிகாலை அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கனரக வாகனமொன்று  வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை  விட்டு விலகி கடையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் அருகாமையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை எனவும், கடையின் முன்புறம் மற்றும் அருகிலிருந்த மின்கம்பம் ஆகியன சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த  மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .