Janu / 2023 ஜூன் 21 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவரும், வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாலையர்கட்டு மற்றும் கோவில் போரதீவு ஆகிய இரு இடங்களில் புனரமைப்புச் செய்யப்பட்ட இரண்டு வீடுகள் உத்தியோக பூர்வமாக வன்னி ஹோப் நிறுவனத்தின் அதிகாரிகளால் செவ்வாய்கிழமை (20) உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதன் போது வன்னி ஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ரி.பாரீஸ், மற்றும் அதன் இணைப்பாளர்கள், போரதீவுப் பற்று பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயற்பட்டு வரும் வன்னி ஹோப் நிறுவனம் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எதுவித வேறுபாடுகளின்றி சேவை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வ.சக்தி




20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025