2026 ஜனவரி 31, சனிக்கிழமை

இளம் மீனவர் சடலமாக மீட்பு

Editorial   / 2026 ஜனவரி 30 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்   

மட்டக்களப்பு களுவன்கேணி கடற்பரப்பில் தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளம் மீனவர் வெள்ளிக்கிழமை (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி, வோட் வாடி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய வடிவேல் வினோதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் களுவன்கேணி கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தின் போது தோணியிலிருந்த இளம் மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போனார்.  அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை காலை களுவன்கேணி கடற்கரையோரத்தில் அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
 

மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X