2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

உதவித் தொகை வழங்கிவைப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முடக்க நிலை காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான 64,482 குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இவ் உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ள நிலையில்  பிரதேச செயலாளர்களின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கும் பிரதான நிகழ்வு,  மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் அரசாங்க அதிபர் கே.கருணாகரனால்  நேற்று முன்தினம் (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் 2ஆம் கட்ட சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 1,500 பயனாளிகளுக்கு இக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

இப்பகுதியிலுள்ள பனிச்சையடி,பாலமீன்மடு, கொக்குவில்,திராய்மடு, கருவேப்பங்கேணி ஆகிய 5 கிராமங்களிலுள்ளவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .