Janu / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக விவசாய செய்கைக்கு தேவையான யூரியா, ரி.எஸ்.பி, எம்.ஒ.பி போன்ற உள்ளீடுகளை விவசாயிகளுக்கு தடையின்றி பெற்றுக் கொள்வதற்கு உரக்கம்பனிகளுக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (11) இடம் பெற்றது
மாவட்டத்தின் 2023/2024 ஆண்டின் பெரும் போகத்திற்கான உரம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் தனியார் கம்பனிகளின் கையிருப்பில் உள்ள உரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் உரத்தின் தரம் மற்றும் விற்பனை விலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
எம் எஸ் எம் நூர்தீன்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .