Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ள அனர்த்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள எஹெட் வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை சுத்தம் செய்து கழிவுகளை அகற்றி, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கான துரித வேலைத் திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் அவசர வேண்டுகோளின் பேரில் இவ்வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட எஹெட் வீட்டுத் திட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (01) விஜயம் செய்த அவர் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் மக்களையும் சந்தித்து அவர்களது அவசர தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினரும் ஸ்தலத்திற்கு வருகை தந்து இப்பகுதி மக்களின் அவசர தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையடுத்து கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களுடன் தொடர்பு கொண்ட ஆதம்பாவா எம்.பி, இம்மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும் வகையில் இப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளையும் உடனடியாக சுத்தம் செய்து இயல்பு நிலையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதற்கமைவாக இப்பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அஸ்லம் எஸ்.மெளலானா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .