Editorial / 2023 ஜனவரி 25 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் உட்பட இரு வியாபாரிகளை 5 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் செவ்வாய்க்கிழமை (24) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சுற்றுச் சூழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.கிருபாகரன் உட்பட்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இரவு புதூரில் போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டபோது போதை வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 150 மில்லிகிராம் ஐஸ்போதை பொருளுடன் கைது செய்தனர்.
அதேவேளை, கருவப்பங்கேணி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை நடாத்திவரும் உரிமையாளரின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை 5 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்
இவ்வாறு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவோர் என்றும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago