2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரே வாரத்தில் 36 பேர் மரணம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 193 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் தொற்றுக்குள்ளாவோரும், தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகவும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலாவது தடுப்பூசி 92.41 வீதமானவை ஏற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஆக குறைந்தளவு தடுப்பூசி 78.84 வீதம் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன் வீடுவீடாகச் இராணுவத்தினரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும், எனவே ஊடரங்கு அமுலில் உள்ள நிலையில் கூட தேவையின்றி சிலர் வீதிகளில் நடமாடிவருகின்றனர். இத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்களாகிய உங்களால் தான் முடியும் ஆகவே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .