2025 ஜூலை 16, புதன்கிழமை

ஒலுவில் மாணவர்களின் தாக்குதலில் 9 பேர் வைத்தியசாலையில்

Janu   / 2025 ஜூலை 15 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது செவ்வாய்க்கிழமை (14) இரவு அதே பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது காயமடைந்த 5 மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும்  ஏனைய 4 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த மாதமும் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்  சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X