2025 ஜூலை 16, புதன்கிழமை

கணேமுல்ல சஞ்சீவ கொலை கான்ஸ்டபிளுக்கு பிணை

R.Tharaniya   / 2025 ஜூலை 16 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழு தலைவர்கனேமுல்ல சஞ்சீவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதுருகிரிய காவல் துறையில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஹசித ரோஷனை, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (11) அன்று பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்மேர்வின் டி சில்வாவின் சமர்ப்பணத்தைத் தொடர்ந்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்,அந்த கொலைக்கு உதவினார் என்பதை நிரூபிக்க நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதன்படி, கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க புதன்கிழமை (16) அன்று சந்தேக நபரை, தலா 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X