Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்முனை பாலத்திற்கு அருகாமையில் உள்ள தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் கசிப்பு தயாரிப்பதாக பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே, கொக்கட்டிச்சோலை பொலிஸார் வியாழக்கிழமை (12) அன்று குறித்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு பீப்பாய்கள் (Barrels) , இரண்டு கலன்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு என்பவற்றுடன், எரிவாயு சிலிண்டர் ஒன்று, சமையல் அடுப்பு மற்றும் இரண்டு குழாய்கள் (Pipes) கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 26 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வ.சக்தி

12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026