2025 மே 01, வியாழக்கிழமை

கசிப்புடன் இருவர் கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 13 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடு ஒன்றில் கசிப்புடன் இரு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் உள்ள  வீட்டில் இச் சம்பவம் இடம்பெற்றது.
 
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில்  கல்முனைபிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்   மறைத்து வைக்கப்பட்டிருந்த  19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
மேலும் இச் சம்பவத்தில்  கைதான  வீரமுனை 04 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய   சந்தேக நபர் மற்றும்  வீரமுனை 01 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் சந்தேக நபர் ஆகியோர் நீண்ட காலமாக இக்கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
 
அத்துடன்  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 13 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பும்  மற்றவரிடம் இருந்து 6 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 இது தொடர்பில் சந்தேக நபர் உள்ளிட்ட  சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க   சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பாறுக் ஷிஹான்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .