Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எப்.றிபாஸ்
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பதூர்நகர் பிரதேசத்தில் 324 கிராம் மற்றும் 94 மில்லிகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நபர் ஒருவர் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த நபரை கைது செய்து வியாழக்கிழமை (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவருக்கு இந்த விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago