Janu / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் திங்கட்கிழமை (4) முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மண்முனை ஒல்லிக்குளம் பகுதியில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி, பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 2 பதுரியா பகுதியில் வசிக்கும் முஹம்மட் ஜெமீல் என்ற முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தன்று காத்தான்குடி பிரதான வீதி டெலிகொம் சந்தியில் இவரது முச்சக்கரவண்டியில் மண்முனைக்கு போக வேண்டும் என கூறி ஒரு நபர் அழைத்துச் சென்றுள்ளார்.
மண்முனை ஒல்லிக்குளம் சென்றபோது முச்சக்கரவண்டியில் பின்னாலிருந்து சென்ற நபர் முச்சக்கரவண்டி சாரதி மீது கத்தியால் குத்தி விட்டு சாரதியிடமிருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இச் சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago