Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 05 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக நீர்ப்பாசனத்தின் மகிமையை நமது உரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிந்தனையில் வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயவிக்ரம, அம்பாறை மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் அம்பாறை மாவட்ட விவசாய சங்கத்தினர், அம்பாறை மாவட்ட விவசாயிகள் அத்துடன் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
காலநிலை மாற்றம் மற்றும் ஒழுங்கற்ற மனித செயற்பாடுகள் காரணமாக கல்லோயா ஆற்றின் பள்ளத்தாக்குகளில் சிறு மழை பொழிந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
இதனால் மாவட்ட விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்து விளைச்சலிலும் குறைவினை ஏற்படுத்தியுள்ளதோடு, இவ் இழப்பினை ஈடு செய்ய ஆண்டுதோறும் பெரும் செலவு ஏற்படுகிறது.
எனவே இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக அரசாங்கமானது கல்லோயா மறுசீரமைப்புத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.ஸாகிர்
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago