Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேளாண்மை நடவடிக்கைகளுக்காக மீண்டும் உழவு வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 க்கும் அதிகமான யானைகள் பட்டியாக வருகை தருவதோடு பொதுமக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்றன.அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் ,அக்கரைப்பற்று ,சம்மாந்துறை,நிந்தவூர், இறக்காமம் ,மத்திய முகாம் ஆகிய இடங்களில் இவ்வாறு யானைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.இதன் போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களை நோக்கி வருகை தருகின்றன.
தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன் இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் பார்வையாளர்களாக உள்ள மக்கள் சத்தங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் யானைகள் உண்ணுவதற்கு வருகை தருகின்றன.
யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகை தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ளமையினால் மீண்டும் காடுகளை நோக்கி திரும்பும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனாலும் ஊருக்குள் யானைகள் சென்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
18 minute ago
30 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
30 minute ago
8 hours ago