R.Tharaniya / 2025 ஜூன் 05 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு கடற்கரை பிரதேசங்களில் பாரியகடலரிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை (05) அன்று ஏற்பட்ட பாரிய கடலரிப்பால் அங்குள்ள நினைவுத்தூபி கடலுக்குள் உள்ள வாங்கப்பட்டிருக்கிறது.
சம காலத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமாக இருப்பதால் காரைதீவு கடற்படை முகாம் தினம் தினம்கடலுக்குள் உள்வாங்கப்பட்டு கொண்டு வருகிறது.
அங்குள்ள பல தென்னை மரங்களை கடல் காவு கொண்டிருக்கின்றது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றார்கள்.மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாதுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலோர குடும்பஸ்தர்கள் கருத்து தெரிவிக்கையில்.
காரைதீவில் இடம் பெற்ற இப் பாரிய ஆபத்தை யாரும் கண்டு கொள்வது இல்லை.ஒலுவில் துறைமுகம் வந்தால் இப் பகுதி எங்கும் இந்த கடல்அரிப்பு கூடுதலாக இருக்கிறது.
எனினும் அரசியல் வாதிகளின் முயற்சியால் நிந்தவூர் சாய்ந்தமருது கல்முனை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் பாரியமுண்டுக்கற்களை இட்டு அப் பிரதேசங்களைப் பாதுகாத்தார்கள்.
அது அவர்களின் உரிமை.ஆனால் மத்தியில் இருக்கின்ற காரைதீவு கடற்கரை இன்று மிகவும் மோசமாக அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
கடலோர பாதுகாப்பு திணைக்களம் இதில் கவனம் எடுக்காதது ஏன்?பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பெயருக்கு நடாத்தப்படுகின்றதா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கவனம் எடுப்பார்களா என்று அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
வி.ரி. சகாதேவராஜா



21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026