2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிண்ணியாவில் நீரில் முழ்கி இளைஞர் பலி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (07) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பத்தில் உயிரிழந்தவர் கிண்ணியா  தாமரைவில் பகுதியைச் சேர்ந்த மௌஜுத் பர்ஸான் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மூன்று  இளைஞர்கள் கடல் குளிப்பதற்காக சென்ற போது அதில் ஒருவர் நீந்த  முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரது சடலம் பொதுமக்கள், மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், 
விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கப்பட உள்ளதாகவும்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .