Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, அரசடி சந்திப் பிள்ளையார் ஆலைய குருக்களின் அலைபேசி, 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் திறப்பு கோர்வை, ஆகிய திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
வழமையைப் போல சனிக்கிழமை (08) ஆறு மணிக்கு பூஜைகளை முடித்துவிட்டு, 7 மணியளவில் அறைக்குச் சென்றுபார்த்தபோது, மேலே குறிப்பிட்ட பொருட்கள் காணாமல் போயிருந்தமையை அவதானித்துள்ளார். அதன்பின்னர், சிசிரிவி கமெரா காட்சிகளை ஆராய்ந்துள்ளார்.
அதில், இளைஞன் ஒருவன், முகத்தை மறைக்க முககவசம் அணிந்தவாறு அறையினுள் சென்று பொருட்களை திருடிக்கொண்டு வெளியேறியமை தொடர்பிலான காட்சிகள் பதிந்துள்ளன. அவைத்தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் குருக்கள் முறைப்பாடு செய்தார்.
இந்தத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
கனகராசா சரவணன்
44 minute ago
46 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
20 Nov 2025