2025 ஜூலை 05, சனிக்கிழமை

குளத்தில் விடப்பட்ட 50 ஆயிரம் மீன் குஞ்சுகள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை  விடும் நிகழ்வு நேற்று (11) நடைபெற்றது.

மீன்குஞ்சு வளர்ப்பு ஊடாக காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குடும்பங்களின்  வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



அந்தவகையில் திலாப்பியா இனத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சுமார் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன.

இந்நிகழ்வை திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

மேலும் உதவிப் பிரதேச செயலாளர் மு.சதிசேகரன், அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் இரா. விக்னேஸ்வரன், அக்கரைப்பற்றுப் பகுதி இணைப்பாளர் இதயதினேஸ், திருக்கோவில் இணைப்பாளர் சேந்தன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .