2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

’செங்கல் வாடி’ முற்றுகை : ஒருவர் கைது

Janu   / 2026 மார்ச் 23 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல் ஓயா ஆற்று பகுதியில் 'செங்கல் வாடி' என்ற பெயரில் ரகசியமாக இயங்கி வந்த பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கல் ஓயா பாலத்திற்கு அடியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த தயாரிப்பு நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கல் தயாரிப்பு நிலையம் (செங்கல் வாடி) என்ற போர்வையில் இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இச் சோதனை நடவடிக்கையின் போது, சேனநாயக்கபுர பிரதேசத்தை  சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 90,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு  பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பகல் வேளைகளில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுவது போல் நடித்து, அதன் மறைவில் கசிப்பு காய்ச்சும் தொழிலை முன்னெடுத்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்கு காய்ச்சப்படும் ஒரு போத்தல் கசிப்பு 1,500 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான பணப்பரிமாற்றங்கள் இரவு வேளைகளில் கல் ஓயா பாலத்திற்கு அடியில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வந்துள்ளமையும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (23) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 பாறுக் ஷிஹான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .