Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 15 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழு ஆலோசகரும் ,தென்கிழக்காசிய நாடுகளுக்கான சுதந்திர தேர்தல் ஆலோசகருமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜகே பர்க்கர் சனிக்கிழமை (14) மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடிய அவர் காத்தான்குடி கஃபே தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு விஜயம் செய்து அங்கு கபே அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் .
கஃபே தேர்தல் கண்காணிப்பு ஆலோசகர் கலாநிதி எம் தயாபரன் மற்றும் கபே மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தேச மானிய ஏ. எல் மீரா சாஹிபு உட்பட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் சந்திப்பில் கலந்து கொண்டனர் .
வன்முறையற்ற தேர்தல், அமைதியான முறையில் வாக்களிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் வாக்குரிமை இல்லாத பாடசாலை மாணவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களால் விநியோகிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரசுரங்களும் சர்வதேச கண்காணிப்பு ஆலோசகருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரீ.எல்.ஜவ்பர்கான்
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago