2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சீனிக்காகக் காத்திருக்கும் மக்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நாட்டில் அண்மைக்காலமாக பால்மா, எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

 இந்நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மொத்த விற்பனை நிலையம் மற்றும் சில்லறைக் கடைகளில் பொது மக்கள் சீனியை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை - மாவடிச்சேனையில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் நுகர்வோரின் நலன் கருதி ஒருவருக்கு ஒரு கிலோ எனும் நிபந்தனைக்கமைய சீனி விற்பனை செய்யப்படுகிறது.

சீனியைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .