Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜூலை 04 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா யாழ்வீதியில் வௌ்ளிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து வவுனியா0 யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் ரக வாகனம் வவுனியா- யாழ். வீதியில் சென்று கொண்டிருந்த போது வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
விபத்தில் பலியானவர் யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதான இ. ஜெகதீஸ்வரன் என்பவராவார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
6 hours ago