Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம் ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள், டெங்கு நோய் பரவக் கூடிய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக, கல்முப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை (10) சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு, வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ள வேண்டும்.

8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025