2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘தடுப்பூசி அட்டையினை உடன் வைத்திருத்தல் வேண்டும்‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,
பொலிஸ் நிலையம் போன்ற இடங்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ளவரும் 30
வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனாத் தடுப்பூசி செலுத்திய
அட்டையினை உடன் வைத்திருத்தல் அவசியமாகும் எனக்  காத்தான்குடி நகருக்கான
கொவிட்-19 தடுப்புச் செயலணி நேற்று முன்தினம் (09) அறிவித்துள்ளது.

நாட்டில் வேகமாகப் பரவிவரும் 'டெல்டா' திரிபு தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய அவசரக் கூட்டத்திலே இத் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர்
தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அனைவரும் தங்களது பகுதி கிராம
சேவகரைத் தொடர்புகொண்டு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை
மேற்கொள்ளுமாறும்  கடற்கரை, ஆற்றங்கரை போன்ற பொது இடங்களில் மக்கள் கூடுவது மறு அறிவித்தல் வரை தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் திருமண வலீமா மண்டபங்கள் வாடகைக்கு விடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகள் மாத்திரம் 25 பேருடன் மட்டுப்படுத்தப்படுவதோடு, கலந்து கொள்ளும் அனைவரது
தகவல்களும் பதியப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .