R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று கட்சியின் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி தேவராசா தவசேகரன் (ரமணன்) முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர், திருகோணமலை மாநகர சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில்; வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டனர். இதில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்றது.
இந்த சத்திய பிரமாண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள், போட்டி பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கனகராசா சரவணன்



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .