Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வீட்டில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று (10) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாத் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிப்பதற்கு இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதனால் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை வீட்டிலே வைத்து பரிசோதனை செய்து, நோய் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் இவர்களை கட்டில்கள் வெற்றிடமாகவுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும், தேவையில்லாமல் ஒன்று கூடுவது, வெளியில் செல்வது போன்றவற்றை முற்றாகத் தவிர்க்குமாறும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago