Janu / 2026 மார்ச் 09 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் திங்கட்கிழமை (09) அன்று உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் தவிசாளரின் சபை உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் சபை இன்று கூடியது.
கடந்த காலங்களில் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக இருமுறை கூட்டங்கள் அழைக்கப்பட்ட போதிலும், போதிய உறுப்பினர்கள் சமூகளிக்காமையினால் அவை தோல்வியில் முடிந்தன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான அரசியல் இணக்கமின்மை காரணமாகவே இந்த இழுபறி நிலை நீடித்தது.
இதனால் சபையின் நிர்வாக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்ததோடு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலையில், தற்காலிக நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பதற்கு அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
திங்கட்கிழமை (09) அன்று நடைபெற்ற தீர்மானமிக்க அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சுலைமான் சாபியும் கலந்துகொண்ட நிலையில் 'கோரம்' உறுதிப்படுத்தப்பட்டது.
வாக்கெடுப்பின் போது: சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சுலைமான் சாபி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய தவிசாளரின் தெரிவைத் தொடர்ந்து, முடங்கிக்கிடந்த நிந்தவூர் பிரதேச சபையின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் இனி சீராக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூருல் ஹுதா உமர்

1 hours ago
9 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
09 Mar 2026