Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனாத் தொற்றினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக அப்பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (22) அடக்கம் செய்யப்பட்ட 48 உடல்களுடன் இதுவரை மொத்தமாக 2018 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நாளொன்றுக்கு 30 தொடக்கம் 50 வரையான சடலங்கள் நல்லடக்கத்துக்கு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 20 ஆம் திகதி மாத்திரம் 53 உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே ஒரே நாளில் அதிகூடிய உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட நாளாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
53 minute ago
56 minute ago