Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு திங்கட்கிழமை (12) மாலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கேட்போர் கூடத்தில், ஆய்வுக்கும மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்த கருத்தரங்கில், தற்போது நமது நாட்டில் அமுலுக்கு வந்திருக்கும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பாக சட்டத்தரணி ஏ.வி. பெனிஸ்லஸ் துஷான் மற்றும் சட்டத்தரணி பாரா பிர்தெளஸ் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, ஆய்வுக்கும மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி அனீஸா பிர்தெளஸ், சட்டத்தரணி எ.உவைஸ் உட்பட உலமாக்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .