2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களையும்  அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்  ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை  மாவட்டம்  இங்கினியாகல பொலிஸ்  பிரிவில் உள்ள கொக்னஹார கிராமத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருப்பதாக அம்பாறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை நடத்தப்பட்டது.

இதன் போது புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்  புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் தண்ணீர் மோட்டார், மின்சாரம் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கம்பி,ஒரு டார்ச், சங்கிலிகள் மற்றும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தோண்டும் பணி பல நாட்களாக நடைபெற்று வருவதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் சட்ட நடவடிக்கைகாக   இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  பாறுக் ஷிஹான்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .