Janu / 2023 மே 31 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தின் (Sri Lanka Association for Software Services Companies - SLASSCOM) ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் அனுசரணையுடன் தொழிற்சந்தை செவ்வாய்கிழமை (30) வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர். அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கணகசிங்கம், SLASSCOM நிறுவன தலைவர் ஆஷிக் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்
அங்குராப்பணம், தொழில் வழிகாட்டல், தொழிற் சந்தை என மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இத்தொழிற்சந்தையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள கலை கலாசாரம், வர்த்தக முகாமைத்துவம், விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் திருகோணமலை வளாகத்தின் பிரயோக விஞ்ஞானம், தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்விப் பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ்,எம் எஸ் எம் நூர்தீன் ,நூருல் ஹுதா உமர்







20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025