2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

பாதுகாப்பு அமைச்சர் சாய்ந்தமருதுக்கு விஜயம்

Janu   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸாருடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார்.

குறித்த கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை(11) மாலை  நடைபெற்றது.

இதன்போது  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனரத் ஆகியோர் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர  அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல   அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமார்  கலந்து சிறப்பித்தனர்.

மேலும்  சரோஜா' என்ற தொனிப் பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர்  சிறுமியர் தொடர்பில் ஸ்ரிக்கர் முச்சக்கரவண்டிகளுக்கு  ஒட்டும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .