Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 12:32 - 1 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மீறி மீண்டும் பெரியநீலாவணையில் மதுபானசாலை கடந்த செவ்வாய்க்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டதையடுத்து தொடர் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
பொதுமக்கள் மூன்றாவது முறையாகவும் ஆர்ப்பாட்டத்தை, கொளுத்தும் வெயிலில் ஞாயிற்றுக்கிழமையும் (16) முன்னெடுத்துள்ளனர்.
சவப்பெட்டி சகிதம் ஏராளமான பொதுமக்கள் குறித்த மதுபானசாலைக்கு முன்பாக பெரியநீலாவணையில் உள்ள இரண்டு மதுபான சாலைகளையும் மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்த போது இங்கு அரசியல்வாதிகள் தேவையில்லையென சிலர் முரண்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
மேலும் இத்போது பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
வி.ரி. சகாதேவராஜா, வா.கிருஸ்ணா
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago
Andrea Monday, 17 February 2025 10:37 AM
அனுரா அரசாங்கம் முன்பு கூறியபடி லைசென்ஸ் பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். அப்போதுதான் தமிழரசு கட்சி போன்றவற்றில் உள்ளவர்களின் பெயர்கள் வெளிவரும். கிளிநொச்சியில் ஒரு முக்கிய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் இதில் சம்பந்த பட்டுள்ளார். அதனால் அவர் அது பற்றி கதைப்பதில்லை. சுமந்திரன் இதனை சடட நடவடிக்கைக்கு உட்படுத்துவதால் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு கொண்டு வர பட்டுள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
6 hours ago