Mithuna / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பிரதேச பாடசாலை மட்ட போதை ஒழிப்புக்குழுவிற்கான விசேட கூட்டம் மூதூர் கலாச்சார மண்டபத்தில் திங்கட்கிழமை (05) இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மாணவர்களிடையே போதைவஷ்து பாவனையை கட்டுப்படுத்துவதற்காக போதை ஒழிப்புக்குழுவான எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது, போதையற்ற பாடசாலையை உருவாக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ,பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி போதைவஷ்து விற்பனை செய்வோரை இணங்கண்டு எவ்வாறு சட்டநடவடிக்கை எடுப்பது என்பது குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மதத் தலைவர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள்,கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .