Editorial / 2026 மார்ச் 17 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி. சகாதேவராஜா
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் (16) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிழ்வு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
திட்டத்தின் நோக்கம்: நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீகச் சூழல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே "கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதற்கு இணையாக, தேசிய ரீதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமங்களை உருவாக்கும் திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
முன்னெடுக்கப்படும் துறைகள்: தெரிவு செய்யப்பட்ட மாங்காடு கிராமத்தில் பின்வரும் துறைகளின் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொண்டு, அக்கிராமத்தை ஒரு முன்மாதிரி உற்பத்தித் திறன் கிராமமாக மாற்றுவதே இத்திட்டத்தின் இலக்காகும்:
நிகழ்வின் சிறப்பம்சங்கள்: பிரதேச செயலாளரினால் சமூக உற்பத்தித் திறன் திட்டம் குறித்த தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ் மற்றும் "கிளீன் ஸ்ரீலங்கா" பிரதேச ஒருங்கிணைப்பாளர் எம். சனுஜன் ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினர்.
மேலும், இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு காணொளிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்ட எதிர்கால அபிவிருத்தித் திட்ட அறிக்கை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள்: இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, திணைக்களங்களின் பிரதிநிதிகள், மாங்காடு கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.









5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago